/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் மாணவிகள் மதிப்பீடு நிகழ்ச்சி
/
வேளாண் மாணவிகள் மதிப்பீடு நிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2024 06:34 AM
கூடலுார் : மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கம்பம் பள்ளத்தாக்கில் தங்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.
இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் லக்சனா, மனீஷா, பவித்ரா, பிரணவஸ்ரீ, ரகுமத்துல்சப்ரின், ரீமா, ரோஷன்சபிகா, ரோஸ்லின் ஜாஸ்மின் ஆகியோர் கூடலுார்அரசு விதைப் பண்ணையில் கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி நடத்தினர். விவசாயம் நிறைந்த இப்பகுதியில் கிராமத்தின் விவசாயம், நில அமைப்பு, பயிர் வகைகள், வரலாற்றுப் பின்புலம் ஆகியவை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. சமூக வரைபடம், வளவரைபடம், காலக்கோடு, இயக்க வரைபடம், தினசரி வேலை அட்டவணை ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்களின் விவசாய நிலம் குறித்த தன்மையை அறிவதற்காக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

