/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்
/
மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்
மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்
மஞ்சளாறு அணை நிரம்பியதால் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்
ADDED : ஆக 15, 2024 04:02 AM

தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணையில் நிரம்பியதால் இரு கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர்த்தேக்க முடியும்.
சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 276 கன அடி நீர்வரத்துள்ளது. இந்த உபரி நீர் இருகண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீரினால் தேனி மாவட்டம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஜி கல்லுப்பட்டி.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, தும்மலப்பட்டி, குன்னுவாரன்கோட்டை பகுதி விவசாயத்திற்கும், நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று கிடைக்கும்.
மஞ்சளாறு அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் செல்வதால் கரையோரம் பகுதி மக்களுக்களுக்கு பொதுப்பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.-