/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடுக்கல் வாங்கல் தகராறு: 8 பேர் மீது வழக்கு
/
கொடுக்கல் வாங்கல் தகராறு: 8 பேர் மீது வழக்கு
ADDED : மே 05, 2024 03:36 AM
போடி, : போடி வினோபாஜி காலனி, கருப்பசாமி கோயில் தெருவில் வசிப்பவர் இளங்கோ 58. இவர் இதே பகுதியை சேர்ந்த முத்துமாரி என்பவரிடம் ரூ. ஒரு லட்சம் கடனாக வாங்கி உள்ளார்.
இதில் ரூ. 75 ஆயிரத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.25 ஆயிரத்தை முத்துமாரி, இவரது மகன் லெனின் உறவினர்கள் காசி, கார்த்திக், வாணீஸ்வரன், கவுசல்யா ஆகியோர் சேர்ந்து இளங்கோவிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இளங்கோ இவரது மனைவி தனலட்சுமி மகன் மதுபாலா ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது போல போடி வினோபாஜி காலனியை சேர்ந்த முத்துமாரிக்கு இளங்கோ தர வேண்டிய ரூ. 25 ஆயிரம் தருமாறு முத்துமாரி, ஆனந்தன் சென்று கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ, மகன்கள் மதுபாலா. காளிசரன் ஆகியோர் சேர்ந்து ஆனந்தனை தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருதரப்பு புகாரில் லெனின், காசி, இளங்கோ, மதுபாலா உட்பட 8 பேர் மீது போலீசார் விசாரிக்கின்றனர்.