ADDED : மே 13, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் கண்காட்சி நடந்தது.
குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பிரியங்கா சாகு, சௌந்தர்யா, சுருதிஸ்ரீ, ஹரிணிஸ்ரீ, வைசாலி சுவாதி, ஸ்ரீ நந்தினி, பா.சுவாதி, துனிசியா பிரியா ஆகியோர் உத்தமபாளையம் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ராமசாமி நாயக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி நடத்தினர். உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நீர் மேலாண்மை, மகசூல் தொழில்நுட்பங்களை விளக்கினர். இக்கண்காட்சியில் உதவி பேராசிரியர்கள் கனிமொழி, அனுஷா, வீர திலகம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வழிகாட்டினர்.