/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டியில் கூடுதல் மின் விளக்குகள் கேமராக்கள் அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : மே 09, 2024 06:00 AM

தேனி: 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முல்லைப் பெரியாறு ஆற்றுப்பாலம் முதல் முத்துத்தேவன்பட்டி பிரிவு தற்காலிக பஸ் ஸ்டாண்டு வரை ரோடு சென்டர் மீடியனில் கூடுதல் மின் விளக்குகள், கேமராக்கள் பொருத்த வேண்டும்.' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கண்ணீஸ்வர முடையார் கோயில் ஆற்றுப்பாலத்தில் தேனி செல்லும் பஸ்கள் நிற்கும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பாதையில் போதிய மின்விளக்குகள், கேமராக்கள் இல்லை. இப்பகுதியில் இரவு நேரத்தில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவதும், பிறரை கேலி செய்யும் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் நடந்தன. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க இப்பகுதியில் ரோட்டின் சென்டர் மீடியன் பகுதிகளில் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆற்றங்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் இல்லாத போதும் கண்காணிக்க வசதியாக கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.