/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்
/
காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்
காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்
காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்
ADDED : ஏப் 09, 2024 12:25 AM
கம்பம் : பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மாணவிகள் சுருதி, சிந்துஜா, சினேகா, சௌந்தர்யா, ஸ்ரீ ஹாஸ்தினி, ஸ்ரீஜா, சுடர்விழி, சுந்தரி, சுஷ்மிதா, சுசி கோகிலா ஆகியோர் சின்னமனூர் பகுதியில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை விளக்கி கூறி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சின்னமனூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு காய்கறி அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது எப்படி என்று விளக்கினர்.
உகந்த அறுவடை காரணிகளை பயன்படுத்துதல், நவீன உங்கட்டமைப்பு இயந்திரங்களை கையாளுதல், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து, சேமிப்பு ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளை குறைக்கும் வழிமுறைகளை கூறினார்கள்.
நிகழ்ச்சியில் சின்னமனூர் உழவர் சந்தை துணை அலுவலர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.