/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிக்கு வசதி செய்து தர வி.ஏ.ஓ.க்கள் வலியுறுத்தல் துாரத்தை குறைத்து உதவியாளர் வழங்க வேண்டும்

ADDED : ஜூன் 07, 2024 06:36 AM
கம்பம்: நிலத்தின் அடங்கல்லை டிஜிட்டல் மயமாக்கும் பணி மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து தர வி.ஏ.ஒ., க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருவாய்த்துறை ஆவணங்களில் சிட்டா, அடங்கல் மிக முக்கியமாகும். சிட்டா என்பது ஒரு நிலம் யார் பெயரில் உள்ளது என்பதை காட்டும். அடங்கல் என்பது அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும். இதில் அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்க மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கடந்தாண்டு உத்தரவிட்டுள்ளார். வி. ஏ.ஒ.,க்கள் இப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பணி செய்ய முதலில் எதிர்ப்பு தெரிவித்த சங்கத்தினர் வருவாய்த்துறை அமைச்சர் வலியுறுத்தியதன் பேரில் சம்மதித்து பணிகளை துவக்கினர்.
ஆனால் பணி மேற்கொள்வதில் அதிக சிரமங்கள் இருந்தது. ஆனால் அரசின் கொள்கை முடிவு என்பதால் வேறு வழியின்றி வி.ஏ. ஒ.. க்கள் பணிகளை துவக்க சம்மதித்தனர். தற்போது 5 சதவீத பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து வி. ஏ.ஒ.,க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், ஒரு வி.ஏ.ஒ. விற்கு குறைந்தது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளது. ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்திற்கும் நேரில் சென்று நிலத்தில் 20 மீட்டர் தூரத்தில் நின்று போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அது சிரமமானது. அதை 5 மீட்டர் தூரமாக குறைக்க வேண்டும். அதே நிலத்தில் நின்று 16 வகையான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். சர்வர் பழுது, இணைய சேவை கிடைக்காதது என பல பிரச்சனை உள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ள ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். கேரளாவில் ட்ரோன் வழங்கி 10 களப்பணியாளர்கள் நியமித்துள்ளனர். ஆனால் இங்கு அந்த வசதிகள் இல்லை. வி. ஏ. ஒ.,மட்டுமே இந்த பணியை மேற்கொள்வது சவாலானது.
டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர் மட்டும் என்பதால் அவர்கள 50 சதவீதம் வரை பணி முடித்துள்ளனர். இங்கு அப்படியில்லை. எனவே வி.ஏ.ஓ.க்குளக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையென்றால் பணிகள் நிறைவு பெற தாமதமாகும். தற்போது நிறுத்தியுள்ள பணிகள் மீண்டும் ஜூலையில் துவங்க உள்ளோம் என்றார்.