ADDED : ஜூலை 20, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி புதுக்காலனியில் வசிப்பவர் நாகராஜ் 59. பிளஸ் 2 படித்துள்ளார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பல ஆண்டுகளாக மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
மருத்துவ இணை இயக்குனர் உத்தரவின் பேரில், போடி அரசு மருத்துவமனை டாக்டர் பாலமுருகன் போலி டாக்டர்களை கண்காணிப்பின் போது அம்மாகுளத்தில் ஒரு அறையில் நாகராஜ் சிகிச்சை அளித்து வந்தார்.
அங்கு சோதனை செய்த போது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஊசி, மருந்து, மாத்திரைகள் வைத்து இருந்தது கண்டு பிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் பாலமுருகன் புகாரில் போடி டவுன் போலீசார் நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.