/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி அணையில் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்தியில் சிக்கல்
/
இடுக்கி அணையில் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்தியில் சிக்கல்
இடுக்கி அணையில் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்தியில் சிக்கல்
இடுக்கி அணையில் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்தியில் சிக்கல்
ADDED : மே 01, 2024 08:06 AM

மூணாறு : இடுக்கி அணையில் நீர் மட்டம் வெகுவாக சரிந்ததால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
அணையின் தண்ணீரைக் கொண்டு மூலமற்றம் நீர்மின்நிலையத்தில் ஆறு ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.
இந்தாண்டு மாவட்டத்தில் கோடை மழை பொய்த்ததால் அணையில் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது. 554 உயரம் கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 201.10 அடியாக உள்ளது.
அதனால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனிடையே மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.