ADDED : ஆக 10, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி சந்தானம் 45.
தனது மாந்தோப்பில் விவசாய பணிகளை முடித்து விட்டு, ஒத்த ஓடை பகுதி வழியாக டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த காட்டு மாடு சந்தானத்தை முட்டி தள்ளியது.
இதில் நெற்றியில் காயமடைந்த சந்தானம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.விளை நிலங்களில் காட்டு மாடு சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.
வனத்துறை நிர்வாகம் காட்டு மாடுகளை வனப்பகுதிகளில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.-