ADDED : ஜூலை 13, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 56. இவர் நேற்று பெரியாற்று கோம்பை புலம், சின்னமொடக்கு பகுதியில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக தோட்டத்திற்குள் வந்த காட்டு மாடு வேல்முருகனை தாக்கியது.
நெற்றி பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.