/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆயுதப்படை போலீஸ் வாகனம் மோதி விவசாயி பலி
/
ஆயுதப்படை போலீஸ் வாகனம் மோதி விவசாயி பலி
ADDED : செப் 18, 2024 03:57 AM
தேனி, : தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே போலீஸ் வாகனம் மோதி விவசாயி சின்னஜக்கம்ம நாயக்கர் 70, பலியானார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
பந்துவார்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னஜக்கமநாயக்கர்.
இவர் அதே பகுதியில் விவசாய கூலியாக வேலை பார்த்து வந்தார். நகரில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசாரை அழைத்து வர புது பஸ் ஸ்டாண்ட் - அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் போலீஸ் ஆயுத படை வாகனம் சென்றது.
இதனை தலைமை காவலர் குமார் 39, ஓட்டினார். வனத்துறைக்கு சொந்தமான நாற்றங்கால் பண்ணை பகுதியில் வாகனம் சென்ற போது, ரோட்டில் நடந்து சென்ற சின்னஜக்கம நாயக்கர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்தவர் உடலை போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி போலீசார் விபத்து, குறித்து விசாரிக்கின்றனர்.