/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதித்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதித்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதித்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதித்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 02, 2024 06:00 AM
தேனி: 'மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், போடி பகுதிகளில் தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்றும் நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.' என, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 24 ஆயிரம் எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடியாகிறது. நோய் பாதித்த 200 எக்டேர் மரங்களை வெட்டி அகற்ற ரூ.93.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேர்வாடல் மீட்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மரத்தினை வெட்டி அகற்றிட மரம் ஒன்றிற்கு ரூ.ஆயிரம் வீதம் அதிகபட்சம் ஒரு எக்டேருக்கு ரூ.32 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களை அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். வேளாண் பல்கலை பேராசிரியர்கள் கள ஆய்வு செய்து மானியம் வழங்கப்படும்.
நோய் தாக்கத்தை குறைக்க தென்னை டானிக் உள்ளிட்ட இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக ஒரு விவசாயிக்கு 40 வீரிய ஒட்டு ரக தென்னை நாற்றுகள் வழங்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி பயன்பெறலாம்., இவ்வாறு தெரிவித்துள்ளார்.

