/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊர்வலம், மாநாட்டில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
ஊர்வலம், மாநாட்டில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
ஊர்வலம், மாநாட்டில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
ஊர்வலம், மாநாட்டில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கூறியுள்ளதாவது: உழவர்கள் உரிமை போராட்டத்தில் பலியானவர்களக்கு அஞ்சலி செலுத்தும் உழவர் தின ஊர்வலம் ஜூலை 5ல் அரியலுாரில் நடக்கிறது.
தொடர்ந்து மாநாடு நடக்கிறது. அதில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி, காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45, எருமை பால் லிட்டருக்கு ரூ. 55 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.