/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடராததால் விவசாயிகள் கவலை தொடராததால் விவசாயிகள் கவலை

ADDED : மே 04, 2024 05:44 AM
கூடலுார்: முல்லைப்பெரியாறு அணையில் 4 மாதங்களுக்குப் பின் ஒருநாள் மட்டும் பெய்த மழை தொடராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் 2023 டிசம்பரில் மழை பெய்தது. அதன் பின் மழையின்றி கடும் வெப்பத்தால் நீர்மட்டம் குறைந்து வந்தது. 4 மாதங்களுக்குப் பின்இருநாட்களுக்குமுன்நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 105 கன அடியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு நாள் மட்டுமே பெய்த மழை தொடரவில்லை.
காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 115.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழக பகுதிக்கு குடிநீருக்காக வினாடிக்கு 105 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1745 மில்லியன் கன அடியாகும். கோடைமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே வரும் ஜூன் மாதம் முதல் போக நெல் சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்க முடியும்.
இந்நிலையில் ஒரு நாள் மட்டுமே பெய்த மழை தொடராததால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.