/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
/
பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 07, 2024 06:54 AM

தேனி: வெண்பட்டு கூடுகள் விலையை உயர்த்தவும், நிரந்தர விலை நிர்ணயம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அளவில் தேனி பட்டு உற்பத்தியில் முன்னனி மாவட்டமாகும். இங்கு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்பெரி செடிகள் சாகுபடியும், பட்டு புழு வளர்ப்பும் உள்ளது. மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில் மல்பெரி 15 ஆண்டு பயிர், புழு வளர்ப்பில் 21 நாட்களுக்கு ஒரு முறை பட்டு கூடு அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் சுமார் 200 கிலோ முதல் 250 கிலோ வரை பட்டு கூடு உற்பத்தி செய்ய இயலும். மாவட்டத்தில் வெண்பட்டு கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இவை முத்துத்தேவன்பட்டியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இயங்கும் மார்க்கெட் மூலம் பல் வேறு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கூடுகளை வாங்கி செல்கின்றன.
விவசாயி சீனிராஜ் கூறுகையில், 'வெண்பட்டு கூடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை மட்டும் விற்பனையாகிறது. சில நாட்களில் மட்டும் கிலோ ரூ.500 முதல் 550 வரை விற்கிறது. இந்த விலை போதியதாக இல்லை. ஒருகிலோ கூடு உற்பத்தி செய்ய ரூ. 200 செலவாகிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பட்டு உற்பத்தியை நிறுத்தும் நிலை உள்ளது. கிலோவிற்கு குறைந்தபட்சம் ரூ. 600 கிடைத்தால் பயனாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நிரந்தர விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.