/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுபொருட்கள் வாங்க விவசாயிகள் அலைக்கழிப்பு
/
இடுபொருட்கள் வாங்க விவசாயிகள் அலைக்கழிப்பு
ADDED : செப் 02, 2024 12:18 AM
பெரியகுளம்: பெரியகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் அந்தந்த விற்பனை மையங்களில் இடுபொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
மாற்று பகுதிக்கு செல்வதால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இவ்வட்டாரத்தில் பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி ஆகிய 4 இடங்களில் வேளாண்மை இடுபொருட்கள் விற்பனை நிலையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்று வந்தனர். இதில் பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை விற்பனை நிலையம், நகராட்சி வணிக வளாகம் கட்டடத்தில் வாடகை பிரச்னையால் வைகை அணை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பெரியகுளத்தில் இருந்து விவசாயிகள் வைகை அணைக்கு செல்வதால் பணம் விரயம், நேரம் விரயம் ஏற்படுகிறது. இதே போல் லட்சுமிபுரம் பகுதி விவசாயிகள் வடுகபட்டிக்கும், தேவதானப்பட்டியில் இடுபொருள் விற்பனை நிலையம் கட்டுமானப்பணி முடிந்தும் திறக்கப்படவில்லை. இதனால் தேவதானப்பட்டி பகுதி விவசாயிகள் வடுகபட்டிக்குக்கும் அலைக்கழிக்கப்படுவது தொடர்கிறது.
அந்தந்த விவசாயிகளுக்கு அலைக்கழிப்பு இல்லாமல் இடுபொருட்கள் வழங்க வேளாண் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.