/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தட்கல் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் விவசாயிகள் புலம்பல்
/
தட்கல் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் விவசாயிகள் புலம்பல்
தட்கல் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் விவசாயிகள் புலம்பல்
தட்கல் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் விவசாயிகள் புலம்பல்
ADDED : ஆக 23, 2024 05:42 AM
தேனி: தட்கல் முறையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
விவசாய மின் இணைப் பெற தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை அமலானது.
இதில் 5 எச்.பி., குதிரைத்திறன் மின் மோட்டார் தேவைப்படுபவர்கள் ரூ.2.5 லட்சமும், 7.5 எச்.பி., மின்மோட்டார் தேவைப்படுவோர் ரூ.2.75 லட்சமும், 10 எச்.பி., மின்மோட்டார் தேவைப்படுவோர் ரூ.3 லட்சமும், 12.30 முதல் 15 எச்.பி.,மின் மோட்டார் தேவைப்படுவோர் ரூ.4 லட்சமும் டிபாசிட் தொகையாக கட்டி விண்ணப்பித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் தட்கல் முறையில் 519 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
வேளாண்துறை தாமதம்:
தட்கல் முறையில் விண்ணப்பிக்க வேளாண் துறை தடையில்லா சான்று வழக்க வேண்டும். ஆனால்
வேளாண்துறை பயனாளிகளின் தகவல்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுத்துகிறது.
இதனால் தட்கல் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதற்கு இணைப்பு வழங்குவதை மின்வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வேளாண்துறை பயனாளிகளின் விபரங்களை சரிபார்த்து விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.