ADDED : ஆக 23, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் போடி தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு மலை, அகமலை ஊராட்சி பகுதியில் நிலங்களை விட்டு வெளியேறுமாறு வனத்துறை விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது.
இதனை கண்டித்தும், விவசாய பொருட்கள் கொண்ட செல்ல அனுமதி மறுப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அகமலை, ஊரடி, அண்ணாநகர், ஊத்துகாடு, சொக்கன்அலை, பட்டூர், பேச்சியம்மன் சோலை, அலங்காரம், உள்ளிட்ட கிராம விவசாயிகள், போடி விவசாயிகள் சங்க நிர்வாகி மூக்கையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

