/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாற்று வளர்க்காமல் 'டிரம் ஷீடர்' மூலம் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம் நவீன கருவிகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
நாற்று வளர்க்காமல் 'டிரம் ஷீடர்' மூலம் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம் நவீன கருவிகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நாற்று வளர்க்காமல் 'டிரம் ஷீடர்' மூலம் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம் நவீன கருவிகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நாற்று வளர்க்காமல் 'டிரம் ஷீடர்' மூலம் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம் நவீன கருவிகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 12:14 AM
கம்பம்: நாற்று வளர்த்து நடவு செய்யும் முறையை கைவிட்டு நேரடியாக டிரம் ஷீடர் ( Drum Seeder ) கருவி மூலம் விதைப்பு பணியை விவசாயிகள் பின்பற்ற வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண்,தோட்டக்கலை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள, நவீன வேளாண் கருவிகளும் பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும் தேனி மாவட்டத்தில் இன்னமும் பழைய முறைகளையே பின்பற்றி வருகின்றனர்.
நெல் சாகுபடியில் நாற்றங்காலில் நெல் விதைத்து, நாற்றுகளை 20 முதல் 28 நாட்கள் வளர்ந்த பின், அதை பறித்து, வயலில் நடவு செய்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மானியம் வழங்கி இயந்திர நடவு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் போதிய அளவு இயந்திரங்கள் இன்றியும், அரசு மானியத்தை நிறுத்தியதாலும் அந்த முறையும் கைவிடப்பட்டது.
தற்போது ஒரு சில விவசாயிகள் டிரம் ஷீடர் மூலம் விதை நெல்லை, நேரடியாக விதைப்பு செய்யும் தொழில் நுட்பத்தை பின்பற்ற துவங்கி உள்ளனர்.
செலவு குறைவு, மகசூல் அதிகம்
அவர்கள் கூறுகையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. டிரம் ஷீடர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 2 மணி நேரத்தில் விதைப்பு செய்யலாம். ஏக்கருக்கு 12 முதல் 15 கிலோ நெல் தேவைப்படும்.
நாற்றங்காலுக்கு 18 கிலோ நெல் தேவைப்படும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 10 பேர் தேவைப்படும். அவர்களுக்கு கூலி ரூ.6 ஆயிரம் செலவாகும். டிரம் ஷீடர் கருவியை ஒருவர் மட்டுமே இயக்குகிறார். அவருக்கு சம்பளம் மட்டுமே. இந் நடவு மூலம் 15 நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்யலாம். அறுவடைக்கான காலம் குறைவு,செலவு மிச்சமாகிறது. கூடுதல் மகசூலும் கிடைக்கும். விதைப்பு செய்த 15 முதல் 18 நாள் கழித்து களைக்கொல்லி இட வேண்டும். நாற்று நடவு செய்த வயலில் 3 வது நாள் களைக் கொல்லி இட வேண்டும். எனவே பல வழிகளில் பயனுள்ள டிரம் ஷீடர் கருவியை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் டிரம் ஷீ டர் கருவியை வாடகைக்கு வழங்க முன் வர வேண்டும். என விவசாயிகள் கோரியுள்ளனர்.