/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடிப்பெருக்கு ஏலத்தோட்டங்களில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
/
ஆடிப்பெருக்கு ஏலத்தோட்டங்களில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
ஆடிப்பெருக்கு ஏலத்தோட்டங்களில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
ஆடிப்பெருக்கு ஏலத்தோட்டங்களில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
ADDED : ஆக 05, 2024 07:32 AM
கம்பம் : ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஏலத்தோட்டங்களில் விவசாயிகள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உண்டு. ஆடியில் பல விசேஷங்கள் இருந்தாலும் ஆடி 18 அதாவது ஆடிப்பெருக்கு நாளில், பலர் புதிய தொழில்களை துவங்குவர். வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும்.
அதே போல இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களில்கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏல விவசாயிகள் இந்த நாளில் பொங்கல் வைத்து காய் பறிப்பை துவங்குவர். ஒரு சிலர் ஆடு, கோழி போன்றவைகளை பலி கொடுத்து காய் பறிப்பை துவங்குவார்கள். அந்த நடைமுறை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. ஆடிப்பெருக்கு நாளான நேற்று காலை வண்டன் மேடு, புளியன் மலை, சங்குண்டான், சாஸ்தா நடை, மாலி, மாதவன் கானல், மேப்பாறை, கல்தொட்டி, புத்தடி உள்ளிட்ட பல பகுதிகளில் கம்பம் பகுதியில் இருந்து குடும்பத்துடன் சென்ற ஏல விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து ஏல விவசாயி கண்ணன் கூறுகையில், 'பருவமழை ஏமாற்றியது. தற்போது கூடுதலாக மழை பெய்து ஏலச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் விவசாயிகள் ஆடிப்பெருக்கு நாளான நேற்று முன்தினம் வழக்கப்படி பொங்கல் வைத்து வழிபட்டனர்.', என்றார்.