/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பண்ணைப்புரத்தில் 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
/
பண்ணைப்புரத்தில் 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
பண்ணைப்புரத்தில் 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
பண்ணைப்புரத்தில் 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
ADDED : ஏப் 29, 2024 05:49 AM
உத்தமபாளையம்: பண்ணைப்புரத்தில் 15 நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குடிநீர் பம்பிங் செய்து வினியோகம் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் குடிநீர் சப்ளையில் தடங்கல் ஏற்படும். காரணம் அணையிலிருந்து தண்ணீர் விடுவிப்பது நிறுத்தப்படும். குடிநீருக்கென குறைந்த அளவு குடிநீர் திறக்கப்படும். தற்போது விநாடிக்கு 100 கன அடி திறந்து விடப்படுகிறது.
லோயர்கேம்பில் உள்ள குடிநீர் வாரிய பம்பிங் ஸ்டேசனிலிருந்து கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
திறக்கப்படும் தண்ணீரில் மதுரை குடிநீர் திட்ட சோதனை ஓட்டத்திற்கென 20 கன அடி எடுத்து கொள்கின்றனர். மீதமுள்ள 80 கன அடியில் கம்பம் நகராட்சி ராட்சத மோட்டார்கள் அதாவது 150 குதிரை சக்தி மோட்டார் மற்றும் இரண்டு 75 குதிரை சக்தி மோட்டார்களை வைத்து உறிஞ்சி கொள்கிறது. இதனால் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய ஊர்களுக்கு பம்பிங் செய்து குடிநீர் வழங்குவதில் சிக்கல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் பண்ணைப்புரத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. - இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலம் அரங்கேறியுள்ளது.

