/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் உலாவரும் கால்நடைகளால் அச்சம்
/
ரோட்டில் உலாவரும் கால்நடைகளால் அச்சம்
ADDED : ஜூன் 27, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : சில மாதங்களாக ரோட்டில் நடமாடும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதும், பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தெருநாய்கள் துரத்தி டூவீலரில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் காயமடைவது தொடர்கிறது.
தற்போது தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் ரோட்டில் அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி பகுதியில் கால்நடைகள் ரோட்டில் நடமாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அவ்வழியாக டூவீலர்களில் செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளால் விபத்துக்கள் ஏதேனும் ஏற்படும் முன் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.