ADDED : ஜூலை 18, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:மனநலம் பாதித்த பெண் கழுத்தறுத்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றர்.
தேனி மாவட்டம், கூடலுார் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த முருகனின் மனைவி அன்பரசி, 49. இவரது கணவர் ஓராண்டிற்கு முன் இறந்து விட்டார். ஓராண்டாக மனநிலை பாதித்த நிலையில் விவசாயப் பணிகளை செய்து வந்தார். நேற்று காலை வீட்டில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது மகன் கார்த்திகேயன் வழக்கறிஞராக உள்ளார். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.