/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செயல்படாத குவாரிகளில் வேலி அமைக்கும் பணி ஜூனில் துவக்கம்
/
செயல்படாத குவாரிகளில் வேலி அமைக்கும் பணி ஜூனில் துவக்கம்
செயல்படாத குவாரிகளில் வேலி அமைக்கும் பணி ஜூனில் துவக்கம்
செயல்படாத குவாரிகளில் வேலி அமைக்கும் பணி ஜூனில் துவக்கம்
ADDED : மே 09, 2024 05:59 AM
தேனி: 'மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை சுற்றி கனிமவளத்துறை சார்பில் வேலி அமைக்கும் பணி ஜூனில் துவங்கும்.' என, கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்கள், தனியார் நிலங்களில் கல்குவாரிகள் செயல்படுகின்றன.
இதில் புறம்போக்கு நிலங்களில் பயன்பாட்டில் இல்லாத 17 கல்குவாரிகளில் உயிரிழப்புகளை தவிர்க்க கடந்தாண்டு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்கும் மேலாக இப்பணிகள் முடங்கின.
சிறுவர்கள் பயன்படாத குவாரிகளில் தேங்கி உள்ள நீரில் குளிப்பது தொடர்கதையாக இருந்தது.
இதனால் இந்தாண்டு பருவமழை துவங்குவதற்கு முன் வேலி அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குவாரிகள் அமைந்துள்ள ஊராட்சிகள் ஒத்துழைப்பு வழங்காததால் வேலி அமைக்கும் பணி தாமதமானதாக அதிகாரிகள் சிலர் கூறினர்.
இதுகுறித்து கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் கூறுகையில், 'பெரியகுளம் பகுதியில் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத குவாரிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வேலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. ஜூனில் வேலி அமைக்கும் பணி துவங்கும்.', என்றார்.