/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புது பஸ் ஸ்டாண்ட் நகராட்சி வள மீட்பு மையத்தில் தீ விபத்து பொருட்கள் சேதம்

ADDED : மே 08, 2024 04:56 AM

தேனி, : புது பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி வள மீட்பு மையத்தில் நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது. இதனால் பிளாஸ்டிக் கட்டும் இயந்திரம் உட்பட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தேனி அல்லிநகரம் நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் நுண் உர செயலாக்க மையம் உள்ளது.
இங்கு குப்பை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரங்களாக தயாரிக்கப்படுகிறது. அருகில் உள்ள வளமீட்பு மையத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பிரித்து தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நேற்று மாலை வளமீட்பு மையத்தில் தீப்பற்றி எரிய துவங்கியது.
அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தேனி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வளமீட்பு மையம் அருகே நிறுத்தியிருந்த நகராட்சி டிரைவர் முருகன் டூவீலர், நகராட்சி பேட்டரி வாகனம், பிளாஸ்டிக் பொருட்களை கட்டும் இயந்திரம் என பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்திற்கான காரணம் பற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.