ADDED : ஜூன் 06, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 7–
தேனி மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ், பயிற்சி அலுவலர் ரவிக்குமார் சார்பில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும். தீ விபத்துகளுக்கு ஏற்ப தடுப்பு பணிகள் என்னென்ன செய்ய வேண்டும், தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், கையாளும் முறை குறித்து பயிற்சி மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பொது மக்கள் பலரும் பங்கேற்றனர்.
