UPDATED : ஜூன் 06, 2026 09:58 PM
ADDED : ஜூன் 06, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
தேனி:முன்னாள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'இது நம்ம இயக்கம்' என்ற அமைப்பை துவக்கி உள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சியை அவரது ஆதரவாளர்கள் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் அந்த அமைப்புக்கு கியூ.ஆர். கோடு மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தினர். இன்று முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அண்ணாமலை இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை துவங்குகிறது.
* தேனி நகராட்சிக்கு எதிரே காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை நடக்கும் என அமைப்பின் உறுப்பினர் நாராயணபிரபு கூறினார். மேலும் விவரங்களுக்கு 72510 74777 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
