/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக்கல்லுாரியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
/
மருத்துவக்கல்லுாரியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : ஏப் 27, 2024 05:09 AM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாவட்ட தீயணைப்புத் துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டீன் பாலசங்கர், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, ஆயுஷ் மருத்துவமனை பொறுப்பாளர் முத்தையா, நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மணிமொழி டாக்டர் ஈஸ்வரன், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள், நர்சிங் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சநதிரக்குமார் முன்னிலையில் உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் தீத்தடுப்பு ஒத்திகைகள் குறித்து விளக்கினார்.
தீயணைப்புத்துறையில் பயன்படுத்தும் மீட்பு கருவிகள், உபகரணங்களை காட்சிப்படுத்தி அதன் பயன்பாடுபற்றி விளக்கப்பட்டது.
முன்னதாக தீயணைப்பான் கருவி மூலம் தீயணைக்கும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயராணி, நிலைய அலுவலர்கள்கள் பழனி, ராஜலட்சுமி, உதயகுமார் மற்றும் 26 தீயணபை்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

