/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை 'பிக்அப்' அணையில் மூழ்கி தீயணைப்பு வீரர் பலி
/
வைகை 'பிக்அப்' அணையில் மூழ்கி தீயணைப்பு வீரர் பலி
ADDED : மே 17, 2024 08:46 PM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சதீஷ்குமார், 35, தீயணைப்பு துறை சென்னை பயிற்சி மைய டிரைவர். ஆண்டிபட்டியில் நடந்த பொங்கல் திருவிழாவிற்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் வைகை அணையின் 'பிக்கப்' அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக்கப் அணை நீரில் சதீஷ்குமார் குதித்த போது தலையில் அடிபட்டு நீரில் மூழ்கினார்.
இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. உடலை தேடும் பணிக்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை 8:00 மணிக்கு பிக்கப் அணையில் உடலை மீட்டனர். இறந்த சதீஷ்குமாருக்கு ராஜகுமாரி என்ற மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

