/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது லாரி மோதி தீயணைப்பு வீரர் காயம்
/
டூவீலர் மீது லாரி மோதி தீயணைப்பு வீரர் காயம்
ADDED : ஆக 24, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா தோப்பூரைச் சேர்ந்தவர் தீயணைப்பு வீரர் இதயக்கண்ணன் 30. கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை முடிந்து தோப்பூருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
டம்டம்பாறை அருகே எதிரே வந்த லாரி, டூ வீலர் மீது மோதியது.
இதில் இதயக்கண்ணனுக்கு முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்படுத்திய கொடைக்கானல் பெருமாள்மலையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவசங்கரிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

