/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொது இடங்களில் கொட்டும் மீன் கழிவுகள் வைகை அணைக்கு வருவோர் முகம் சுளிப்பு மீன் கடைகளை முறைப்படுத்தவேண்டும்

ADDED : மே 07, 2024 05:49 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் மீன் கடை கழிவுகளை பொது இடங்களிலும் ரோட்டின் ஓரங்களிலும் கொட்டுகின்றனர். மீன் கழிவுகளின் துர்நாற்றம் சுற்றுலா வரும் பயணிகளுக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது.
வைகை அணையில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்படும் மீன்களை வியாபாரிகள் வாங்கி வந்து ஆங்காங்கே கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். வைகை அணை மீன்களுடன் கடல் மீன்கள், கண்மாய் மீன்களையும் விற்பனை செய்கின்றனர். மீன் கடைகளில் பொதுமக்கள் வசதிக்காக வியாபாரிகள் மீன்களை அறுத்து சுத்தம் செய்து விற்பனை செய்கின்றனர். தினமும் வைகை அணை பகுதியில் 300 முதல் 500 கிலோ மீன்கள் விற்பனை உள்ளது. வைகை அணை நுழைவுப் பகுதியான பெரிய பாலம் மற்றும் ரவுண்டானா அருகே 10 க்கும் மேற்பட்ட மீன்கள் சுத்தம் செய்து விற்கும் கடைகள் செயல்படுகிறது. மீன்களை சுத்தம் செய்தபின், அதன் கழிவுகளை மண்ணில் புதைக்காமல் ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். மீன்களை கழுவிய நீரையும் பொது இடங்களில் கொட்டுகின்றனர். மீன் கழிவுகள், கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் நடந்தோ அல்லது வாகனங்களிலோ இந்த இடத்தை கடந்து தான் செல்ல வேண்டும். மீன் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் சுற்றுலா வரும் பயணிகளுக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, நீர் பாசனத்துறையினர் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீன் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதித்தும், பொது இடங்களில் செயல்படும் மீன் கடைகளை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.