/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருதரப்பினர் இடையே தகராறு கற்கள் வீசி தாக்கியதில் ஐவர் காயம்
/
இருதரப்பினர் இடையே தகராறு கற்கள் வீசி தாக்கியதில் ஐவர் காயம்
இருதரப்பினர் இடையே தகராறு கற்கள் வீசி தாக்கியதில் ஐவர் காயம்
இருதரப்பினர் இடையே தகராறு கற்கள் வீசி தாக்கியதில் ஐவர் காயம்
ADDED : மே 02, 2024 05:57 AM
தேனி: தேனி பின்னத்தேவன்பட்டி அருகே இளவேனிர்நகரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் கற்கள் வீசி தாக்கி கொண்டனர். அதில் ஐவர் காயமடைந்தது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பின்னத்தேவன்பட்டி அருகே இளவேனிர் நகர் உள்ளது. இங்கு அரசு சார்பில் வீடுகள் அமைத்து இரு சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டது. அதன் அருகே புதிதாக மேலும் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் தங்கள் சமுதாயத்தினருக்கு அதிக வீடுகள் ஒதுக்க வேண்டும் என கூறி இரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் மாறி மாறி மனு அளித்து வந்தனர். இதனால் இரு தரப்பிலும் பிரச்னை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோழி காணாமல் போனதாக பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதில் 5 பேர் காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகராறின் போது டூவீலருக்கு சிலர் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு தரப்பினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்காமல் திரும்பிச் சென்றனர்.

