ADDED : மே 15, 2024 07:01 AM
தேனி : வீரபாண்டி திருவிழாவிற்கு மனைவியுடன் சென்றுவிட்டு, டூவீலரில் வீடு திரும்பிய அப்பள வியாபாரி மனைவியின் கழுத்தில் இருந்த ரூ.1.72 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை மர்ம நபர்கள் வழிப்பறி செய்தது குறித்து பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பூதிப்புரம் பேரூராட்சி தெற்குச் சாவடி தெரு முருகன் 39. அப்பள வியாபாரி. மே 13ல் வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது போடி பைபாஸ் ரோடு தனியார் பேக்கரி அருகே டூவீலரில் தனது மனைவி ஜோதிமணியுடன் 35, சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஜோதி மணி அணிந்திருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500 மதிப்புள்ள ஐந்து பவுன் தாலிச்செயினை வழிப்பறி செய்து தப்பி ஓடினர்.
ஜோதிமணியின் கணவர் முருகன் புகாரில் போலீசார் வழிப்பறி செய்து சென்ற மர்மநபர்கள் குறித்துவிசாரிக்கின்றனர்.

