/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
/
மத்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : மார் 22, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளத்தில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் மத்திய ஆயுதப்படை பிரிவு போலீசார், பெரியகுளம் சப்-டிவிஷன் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
பெரியகுளம் தேனி ரோடு சினிமா தியேட்டர் அருகே துவங்கிய ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் துவக்கி வைத்தார்.
டி.எஸ்.பி., சக்திவேல் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் 80 மத்திய ஆயுதப்படை கம்பெனி வீரர்கள், பெரியகுளம் சப்-டிவிஷன் போலீசார் பங்கேற்றனர்.
தெற்கு தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,வி.ஆர்.பி., நாயுடு தெரு, மூன்றாந்தல் காந்தி சிலை உட்பட தென்கரை, வடகரை முக்கிய தெரு வழியாக ஊர்வலமாக சென்றனர்.

