/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒளிரும் ஹைமாஸ் விளக்குகள் தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)
/
ஒளிரும் ஹைமாஸ் விளக்குகள் தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)
ஒளிரும் ஹைமாஸ் விளக்குகள் தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)
ஒளிரும் ஹைமாஸ் விளக்குகள் தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)
ADDED : செப் 16, 2024 05:11 AM
ஆண்டிபட்டி : தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் எதிரே, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே 2 இடங்களில், டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு, டி. சுப்புலாபுரம் விலக்கு ஆகிய ஆறு இடங்களில் 30 மீட்டர் உயரம் கொண்ட ஹைமாஸ் விளக்குகள் பல மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
விளக்குகளுக்கான மின் இணைப்பு கிடைக்காமல் பல மாதங்கள் செயல்படாமல் கிடந்தது. இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் செப்டம்பர் 8ல் வெளியானது. தற்போது தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் இரவில் ஒளிர்கிறது. இதனால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.