ADDED : ஆக 16, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பி மறுகால் பாய்வதால், வராகநதியில்
தண்ணீர் அதிகளவு செல்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.