/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாட்டிற்கு வரும் பூ மார்க்கெட்
/
தேனி புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாட்டிற்கு வரும் பூ மார்க்கெட்
தேனி புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாட்டிற்கு வரும் பூ மார்க்கெட்
தேனி புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாட்டிற்கு வரும் பூ மார்க்கெட்
ADDED : மார் 15, 2025 06:05 AM
தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.21 லட்சம் செலவில் பூ மார்க்கெட் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நகராட்சி கட்டடத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டது.
தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வந்தது. ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே பகுதியில் சில வியாபாரிகள் கடையை வைத்தனர். சிலர் சுப்பன்செட்டி தெருவில் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ரூ.21 லட்சத்தில் பூ மார்க்கெட் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. அதற்கான பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில் 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது,' என்றனர்.