/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் பகுதியில் பறக்கும் படை சோதனை
/
பெரியகுளம் பகுதியில் பறக்கும் படை சோதனை
ADDED : ஏப் 18, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் 24 மணி நேரம் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை ஏப்.19 தேர்தல் நடக்க உள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்யக்கூடும் என பறக்கும்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், பெரியகுளம் அருகே வடுகபட்டி பைபாஸ் ரோடு, கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் அருகே, சருத்துப்பட்டி லட்சுமிபுரம் நீதிமன்றம் அருகே மதுராபுரி என ஐந்து இடங்களில் சோதனையிட்டு விட்டு வருகின்றனர். பெரியகுளம் சட்டசபை தொகுதி முழுவதும் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

