/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்
/
மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்
ADDED : பிப் 09, 2025 05:49 AM
சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் நாளை ( பிப்.,10 ) நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 5 இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் உணவுகளை ஆய்வு செய்யும் படி உணவு பாதுகாப்பு துறையினருக்கு கோயில் செயல் அலுவலர் நதியா கடிதம் அளித்துள்ளார்.
சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலாகும்.
கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் செய்து, நாளை காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலிற்கு வெளியே மார்க்கையன்கோட்டை ரோட்டில் இரண்டு இடங்களிலும், நகருக்குள் 3 இடங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது.
அன்னதானம் நடைபெறும் இடங்களையும், அன்னதானத்தில் வழங்கும் உணவையும் ஆய்வு செய்து, உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சின்னமனூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுரேசுக்கு , கோயில் செயல் அலுவலர் நதியா கடிதம் அளித்துள்ளார். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

