/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்பந்தாட்ட போட்டி: ஐ.டி.டி. அணி வெற்றி
/
கால்பந்தாட்ட போட்டி: ஐ.டி.டி. அணி வெற்றி
ADDED : மார் 02, 2025 05:23 AM

மூணாறு: மூணாறில் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் இறுதி போட்டியில் ஐ.டி.டி. அணி வெற்றி பெற்றது.
மூணாறில் தேயிலை எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகளை கே.டி.எச்.பி. கம்பெனி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்தாண்டு 76வது பின்லே சுழற்கோப்பைக்கான போட்டிகள் பிப்.8ல் .துவங்கின. 14 அணிகள் மோதின. அதன் இறுதி போட்டி நேற்று நடந்தது. ஐ.டி.டி., கே.டி.எச்.பி. டிபார்ட்மென்ட் ஆகிய அணிகள் மோதின. அதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஐ.டி.டி. அணி வெற்றி பெற்றது.
குண்டுமலை எஸ்டேட் அணி சிறந்த அணியாகவும், கே.டி.எச்.பி. டிபார்ட்மென்ட் அணியைச் சேர்ந்த வினோத் சிறந்த வீரராகவும், நயமக்காடு எஸ்டேட் அணி கோல்கீப்பர் செல்வகுமார் சிறந்த கோல்கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற அணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கே.டி.எச்.பி.கம்பெனி நிர்வாக இயக்குனர் மாத்யூ ஆப்ரகாம் மனைவி கீதாஆப்ரகாம் கோப்பைகளை வழங்கினார்.