/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

ADDED : ஏப் 18, 2024 05:58 AM
கம்பம்: தேனி தொகுதியில் தி.மு.க., அ.ம.மு.க.,வில் போட்டியிடுபவர்கள் வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என அமைச்சர் உதயகுமார் கம்பத்தில் பிரசாரம் செய்தார்.
தேனி தொகுதி கம்பத்தில் அ.திமு.க., வேட்பாளர் நாராயசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், 'தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர்வரி, பால் விலை, பத்திர பதிவு கட்டணம் என அனைத்தும் உயர்ந்து விட்டது. கடன் வாங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு தி.மு.க. வில் போட்டியிடும் வேட்பாளர் அ.தி.மு.க.,வில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டவர். அவர் கூறுகிறார் இரட்டை இலையை வீழ்த்துவேன் என்று. வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர். இன்னொருவர் ஜெயலலிதா கூறியதால் தான் 14 ஆண்டுகள் தேனிக்கு வரவில்லை என்று கூறுகிறார். இவர் செய்த துரோகத்திற்கு என் முகத்தில் விழிக்காதே என ஜெயலலிதா கூறினார். அவரை தேனிக்கு போகவேண்டாம் என கூறவில்லை. மக்கள் மறந்து விடுவார்கள் என தவறான தகவலை கூறுகிறார்,' இவ்வாறு பேசினார்.