ADDED : ஆக 20, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆவணி மாதம் பவுர்ணமி பூஜை நடந்தது. கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பவுர்ணமி பூஜை முன்னிட்டு
விக்னேஸ்வரன் பூஜை, அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை, ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. மகாலட்சுமி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.