/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
/
பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2024 04:16 AM
கம்பம், : முல்லைப் பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூரில் இருந்து பழனிசெட்டி பட்டி வரை 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை முல்லைப் பெரியாறு அணையில் நீர் நிரம்ப உதவும்.
வடகிழக்கு பருவ மழை கை கொடுக்காது. தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரே கம்பம் பள்ளத்தாக்கு இரு போக சாகுபடிக்கும் பயன்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. வரத்து விநாடிக்கு 3579 கன அடியாகவும், வெளியேற்றம் 967 கனஅடியாகவும் உள்ளது.
தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் நடவு பணிகள் முழு வீச்சில் துவங்கவில்லை. சில பகுதிகளித் மட்டும் நடவு துவங்கியுள்ளது. அக்., இறுதி முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் தேவை உள்ளது .
இந்நிலையில் அணையிலிருந்து 967 கன அடி தண்ணீர் எடுப்பதை குறைக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன், சின்னமனூர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா கூறுகையில், அணையின் நீர் மட்டம் 125 அடிக்கு மேல் இருந்தால் பரவாயில்லை.
தற்போது 120 அடி தான் உள்ளது. மழை இல்லாவிட்டால் நீர் மட்டம் உயராது. இந்த நிலையில் அணையில் இருந்து ஆயிரம் கன அடி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் இருப்பு இருந்தால், வைகை அணைக்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வைகை அணை பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் தான். ஆனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தேவையான அளவு உயர்ந்த பின் விடுவிக்கலாம்.
தற்போது ஆயிரம் கன அடி எடுத்தால், கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு உறுதி சொல்ல முடியாத நிலை எழும். எனவே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை முன்வர வேண்டும் என்றனர்.