/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிமுறை
/
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிமுறை
ADDED : ஆக 25, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: விநாயகர் சதுர்த்திக்காக களிமண், சுற்றுச்சூழல் மாசுபடாத பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளில் ஆபரணங்கள் மலர்கள், வைகோல் மூலம் தயாரிக்கப்பட வேண்டும்.
வர்ணங்களுக்கு ரசாயனம் பயன்படுத்தகூடாது. மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு விழா கொண்டாட வேண்டும். விபரங்களுக்கு போலீஸ் எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.