/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சிலைகள் எட்டு இடங்களில் கரைக்க அனுமதி
/
விநாயகர் சிலைகள் எட்டு இடங்களில் கரைக்க அனுமதி
ADDED : செப் 04, 2024 01:14 AM
தேனி : மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்த சிலைகள் அங்கீகரிக்கப்பட்ட 8 நீர்நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன் விபரம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராக நதி, உத்தமபாளையத்தில் ஞானம்பாள் கோயில் முல்லைப் பெரியாறு, தேனியில் அரண்மனைப்புதுார் முல்லைப் பெரியாறு, கம்பம் சுருளிபட்டி ரோடு முல்லைப் பெரியாறு, சின்னமனுார் மார்க்கையன் கோட்டை முல்லைப் பெரியாற்றின் பாலம், ஆண்டிபட்டி பெரியகுளம் ரோட்டில் வைகை ஆறு, வருஷநாடு வைகை ஆறு மொட்டம் பாறை தடுப்பணை,போடியில் கொட்டக்குடி ஆறு என 8 நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.