/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம், சின்னமனூரில் இன்றும் நாளையும் விநாயகர் ஊர்வலம்
/
கம்பம், சின்னமனூரில் இன்றும் நாளையும் விநாயகர் ஊர்வலம்
கம்பம், சின்னமனூரில் இன்றும் நாளையும் விநாயகர் ஊர்வலம்
கம்பம், சின்னமனூரில் இன்றும் நாளையும் விநாயகர் ஊர்வலம்
ADDED : செப் 08, 2024 04:57 AM
கம்பம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கம்பம் சின்னமனூர், உத்தமபாளையம் நகரங்களில் இன்றும், நாளையும் விநாயகர் ஊர்வலம் நடத்த ஹிந்து முன்னணி , ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்று காலை கம்பத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 63 சிலைகளும் , ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 17 சிலைகளும் ஊர்வலமாக சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்க உள்ளனர். உத்தமபாளையத்தில் 26 சிலைகளும் ஒன்றிய பகுதியில் 15 சிலைகளும் என முல்லைப் பெரியாற்றில் 41 சிலைகள் கரைக்கப்படுகிறது.
சின்னமனூரில் நாளை ( செய். 9 ) மாலை ஹிந்து முன்னணி சார்பில் 55, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 88 சிலைகள் ஊர்வலமாக சென்று மார்க்கையன்கோட்டை ரோடு முல்லைப் பெரியாற்றில் கரைக்கின்றனர். விநாயகர் ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் விரிவாக செய்துள்ளனர்.