ADDED : ஜூலை 12, 2024 04:57 AM

கூடலுார்: குள்ளப்பகவுண்டன்பட்டி ரோட்டோரத்தில் குவியும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
குள்ளப்பகவுண்டன்பட்டி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் குப்பை அனைத்தும் நுழைவுப் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இப்பகுதியில் ஏற்கனவே இருந்த குளம் குப்பையால் மூடப்பட்டுள்ளது. குளத்தை தூர் வாராமல் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் தேங்க வழியின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. சுருளியாறு மின் நிலையத்திற்கு செல்லும் முக்கிய பாதையாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். அடிக்கடி குப்பையில் தீ வைத்து எரிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுப்பதுடன் குப்பையை மாற்று இடத்தில் கொட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.