/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை நிறைவு
/
கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை நிறைவு
ADDED : மே 06, 2024 12:45 AM
கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (மே 7) நிறைவடைகிறது. நேற்று மதியம் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 17 கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் நடக்கிறது. தினமும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல், பூக்குழி இறங்குதல் நடைபெற்றது.
நாளை (மே 7ல்) சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. நேற்று மதியம் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயப்பாண்டியன், கலைவாணி குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் அன்னதானத்தை துவங்கி வைத்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் நகராட்சி தலைவர் வனிதா, தொழிலதிபர் முத்தையா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.