/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சள் நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு சென்ற கவுமாரியம்மன்
/
மஞ்சள் நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு சென்ற கவுமாரியம்மன்
மஞ்சள் நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு சென்ற கவுமாரியம்மன்
மஞ்சள் நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு சென்ற கவுமாரியம்மன்
ADDED : மே 16, 2024 06:11 AM

தேனி : வீரபாண்டி சித்திரை திருவிழா முடிந்ததை தொடர்ந்து மஞ்சள்நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு சென்றகவுமாரியம்மன் உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டநிலையில், சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
இத்திருவிழாவிற்காக கவுமாரியம்மன் கோயிலில் ஏப்.,17 ல் திருக்கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து மே 7 முதல் மே 14 வரை திருவிழா சிறப்பாக நடந்தது. திருவிழாவிற்காக ஆபரணப்பெட்டி கோயில் வீட்டில் மே 8 அதிகாலை வந்தது.
திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் மே 10ல் துவங்கியது. தேர் மே 13ல் நிலைக்கு வந்தது. தொடர்ந்து ஆபரணப்பெட்டிக்கு மே 14ல் சிறப்பு செய்யப்பட்டது. நேற்று காலை மஞ்சள் நீராட்டத்துடன் கோயில் வீட்டிற்கு ஊர்வலமாக அம்மன் உற்ஸவமாக எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதில் திரளாக பக்தர்கள், முறைமைதாரர்கள், கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், பணியாளர்கள், ஊழியர்கள் போலீசார் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுடன் கவுமாரியம்மன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.